காத்தான்குடி வரலாற்றில் முதன்முறையாக நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களை கௌரவிக்கும் வைபவம்.














 

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு  நிருபர்



கிளீன் காத்தான்குடி அமைப்பினர் ஏற்பாடு செய்த காத்தான்குடி நகர சபையில் கடமை புரியும் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கையுறை மற்றும் பகலுணவு வழங்கி கௌரவிக்கும் வைபவம் காத்தான்குடி வெல்கம் மண்டபத்தில் கிளீன் காத்தான்குடி அமைப்பின் தலைவரும், முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர்  ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் காத்தான்குடி வெல்கம் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் பிரதம அதிதியாகவும்,நகரசபை செயலாளர் திருமதி ரிப்கா சபீன் கௌரவ அதிதியாகவும்,கஃபே தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மாஸ் மக்கீன் சிறப்பு அதிதியாகவம் கலந்து கொண்டனர்.

கிளீன் காத்தான்குடி அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அல்ஹாபிழ், அஷ்ஷெய்க் அஸ்ஹர் ஜமாலியின் புனித மறை ஓதலுடனும், அமைப்பின் உப தலைவரும், முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான கவிஞர் இல்மி அஹ்மத்லெப்பை ஜேபியின் வரவேற்புரையுடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.


கிளீன் காத்தான்குடி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையுரை நிகழ்த்தினார்.காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா சபீன்,கஃபே தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி நன்றிரை நிகழ்த்தினார்.


கிளீன் காத்தான்குடி அமைப்பின் பொருளாளர் தேசமான்ய அல்ஹாஜ் ஏ எல் எம்.மீராசாஹிபு, ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்.எம்.நஸீர், அமைப்பின் செயலாளர் கவிமேகம் எப்எம்.இக்பால்கான்,உபதலைவர்  மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்ஏஎம்.பஷீர்,உப செயலாளர் எம்ஏஎம்.நிவாஸ்,உப பொருளாளர் அல்ஹாஜ் எம்ஏ.றஸீத் , நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான கவிஞர் ஏம்ரீஎம்.யூனூஸ் ,கலைமதி எம்ஏசீ.றபாய்தீன் ,கவி மேகம் உஸனார் ஜாபீர் , கஃபே பிரதிநிதிகள்,நகரசபை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.