பொகவந்தலாவ பகுதியில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (09) நாட்டில் ஏற்பட்ட மின் விநியோக செயலிழப்பின் போது, பொகவந்தலாவ பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டுள்ளது.
ஜெனரேட்டரிலிருந்து வந்த புகையை சுவாசித்ததில் கடையில் இருந்த நான்கு ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.