வரதன்
கடுகதி புகையிரதத்தில் காட்டு யானைக் கூட்டம் மோதி ரெயில் தடம் புரள்வு இதன் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து தங்களது பயணத்தை மட்டக்களப்பில் இருந்து தொடர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை
நேற்று இரவு (8.15) மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா கடுகதி புகையிரதத்தில் இங்கிறகொட மற்றும் கல்லோயா இடைப்பட்ட காட்டுப் பகுதியில் வியாழக்கிழமை (20.02.2025) அதிகாலை காட்டு யானைக் கூட்டம் ஒன்று குறித்த கடுகதி ரெயிலில் மோதி குறித்த ரெயில் தடம் புரண்டுள்ளது.
இதில் 5 காட்டு யானைகள் இஸ்த்தலத்திலேயே பரிதாகரமாக உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக மட்டக்களப்பிலிருந்து அதிகாலை கொழும்பு நோக்கி செல்லவிருந்த புலத்திசி கடுகதி சேவை மற்றும் காலை 6 .10 மணிக்கு புறப்படவிருந்த உதய தேவி கடுகதி சேவை மற்றும் இன்று மதியம் 11 மணிக்கு புறப்பட இருந்த மகோக்கான ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது
இதனை அடுத்து இதில் பயணம் செய்தவர்கள் போக்குவரத்து பஸ் சேவைகளின் உதவியுடன் கல்லோயா ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்கள் பயணத்தை தொடர ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த பயணிகளும் இவ்வாறு போக்குவரத்து பஸ் உதவியுடன் இங்கிறகொடவில் இருந்து மீண்டும் புகையிரதத்தில் இன்று காலை 11 மணியளவில் மட்டக்களப்பை வந்தடைந்தனர்
நேற்று இரவு 7 மணி அளவில் ஆரம்பித்த தங்களது பயணத்தை மக்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மட்டக்களப்பை வந்தடைந்ததாகவும் இதில் சிறுவர்கள் வயதானவர்கள் நோயாளிகள் மட்டக்களப்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது இருப்பினும் புகையிறத நிலையத்திலிருந்து அவர்களது சொந்த இடங்களுக்கு செல்வதற்காக போக்குவரத்து சேவைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கவில்லை
இதனால் அவர்கள் நீண்ட தூரம் பயணித்து மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு சென்று தங்களது பயணத்தை தொடர வேண்டி இருந்தது தாம் இரவு முழுவதும் மிகுந்த சிரமப்பட்டு பயணம் செய்து வரும்போது
இவ்வாறான தொடர் பஸ் சேவைகள் தமக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும் என அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்
இதேவேளை தடம் புரண்ட புகையிறத சேவை பாதையின் திருத்த பணிகள் இன்று மாலை நிறைவடைந்த பின்பு மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான இரவு கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என
மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் அழகையா பேரின்ப ராஜா தெரிவித்தார்