விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது.

 

 


 

யாழ்ப்பாணம் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் ,  அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ் . மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. 

குறித்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். 

குறித்த கூட்டத்திற்கு, விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ, விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை எனவே அந்த இணக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

விகாரை அமைக்கப்பட்டுள்ள 7 ஏக்கர் காணி, அதனை சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாறாக விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது. 

விகாரைக்கு உரிய காணியில், பௌத்த சமய முன்னேற்றத்திற்கான சைத்யம், புத்த மெதுரா, போதி, அன்னதான மடம், மடாலயம், ஓய்வு மண்டப வசதிகள், தியான மண்டபங்கள், பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.