வரதன்
விரைவில் முந்தெனி ஆறு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்குடனான கலந்துரையாடல் இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி சுசில் ரணசிங்க, வெளி நாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் மஞ்சுளா சமரகோன், பொறியியலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.