யாழ் அரச அதிபரின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் வாகனத்தை செலுத்தி சென்ற மாவட்ட செயலரின் மகன் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஆதியின் நண்பர் கடும் காயங்களுக்கு உள்ளானதுடன், அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்குப்பட்டமையால், சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குறித்த வாகனத்தை மாவட்ட செயலரின் மகனே செலுத்தி சென்று விபத்துக்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.