மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனாணை - ஓமடியாமடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (04) இரவு பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமடியாமடு கிராமத்தைச் சேர்ந்த செல்லையா சுந்தரலிங்கம் (வயது -63) எனும் ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ள நிலையில், அதனை விலக்கச்சென்ற நிலையில் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சண்டையிட்ட சகோதரர்களின் இத்தாக்குதலே இக்கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.