(ஏ.எல்.எம். சபீக்)
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச்சங்கத்தினர் இன்று (04) செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணிக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி வளாகத்தினை சிரமதானம் செய்யும் பணியினை முன்னெடுத்தனர்.
ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிளீன் சிறீலங்கா வேலை திட்டத்தித்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் இவ் சிரமதானம் செய்யும் பணியினை நடத்தினர்.
இவ் சிரமதான பணியின் போது காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் உற்பட முச்சக்கர வண்டி சாரதிகள் கலந்து கொண்டனர்.