தமிழோசை ஆனந்தி' என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் 21/02/2025 அன்று லண்டனில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார்.
1970 காலகட்டத்தில் இங்கிலாந்தை வந்தடைந்தவர் பி.பி.சி தமிழோசையின் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்றிவந்தார்.
பின்னர், நிரந்தர அறிவிப்பாளராகிப் பொறுப்புகள் ஏற்றுச் செயற்பட்டவர், மூன்று தசாப்தங்களாக பி.பி.சி தமிழோசையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பி.பி.சி தமிழோசையில் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் பணியாற்றிவந்த காலத்தில் தாயக உறவுகளின் அவலங்களையும் தமிழோசை வாயிலாக உலகெங்கும் கொண்டு சென்றதில் பெரும் பங்கு வகித்தார்.
உடல் நலக்குறைவுக்குள்ளாகியிருந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.