ஆறு மாதக் குழந்தை ஒன்று தனது சகோதரனால் தவறுதலாக நசுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது

 


வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாதக் குழந்தை ஒன்று தனது மூத்த சகோதரனால் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை தெற்கு, வெனிவெல்கெட்டிய பகுதியைச் சேர்ந்த வினுலை திஹாக்யா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தனது மூத்த சகோதரனால் அந்த குழந்தையின் மீது தவறுதலாக விழந்ததில் மூச்சுத் திணறடிக்கப்பட்டதால், களுத்துறை நாகொட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை இறந்துவிட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.