பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது சூடு - கேரள கஞ்சாவுடன் ஆண், பெண் ஆகிய இருவர் கைது

 



மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தரவின் விஸ்கம் மாவத்தை பகுதியில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று (23) இரவு மாலபே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, ​​பயணித்த கார் ஒன்றை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கார் திடீரென பின்னோக்கிச் சென்றுள்ளது, இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காரின் சக்கரங்களில் ஒன்றை நோக்கிச் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த கார் அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதி நின்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய சோதனையின் போது, ​​சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.8 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருட்களை கொண்டு சந்தேகநபர்களான 30 வயது ஆண் ஒருவரும், 33 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்கொட பகுதியில் வசிக்கும் ​​சந்தேகநபர்களது வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது, சுமார் 1 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.