மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்..
வான் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், முன்னாள் இராணுவ சிப்பாய்….
இலங்கை இராணுவ கரப்பந்தாட்ட அணியில் இருந்து அப்சென்ட் ஆனவர்..
91 ஆம் ஆண்டில் பிறந்தவர்.. ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமை.. இன்றும் அந்தளவு ரிஸ்க்கை எடுத்து அவர் ரஸ்க் சாப்பிடுவது போல் இருந்தமைக்கு இந்த போதைப்பொருள் பாவனையே காரணமாம்..
ஜப்பானில் இருக்கும் கெசெல்பத்தர பத்மே, ராகமவில் இருக்கும் பட்டுவத்த சாமர, கம்பஹா ஒஸ்மன் ஆகிய மூவரும் இணைந்து இந்த தமிழ்ப்பட பாணியிலான மயிர்கூச்செரியும் திட்டங்களை வகுத்துள்ளனர்..
தாக்குதல் சம்பவத்தின் பின்னர் புத்தளம் ஊடாக மன்னார் சென்று , இந்தியா பின்னர் டுபாய் அல்லது ஜப்பான் செல்வதுதான் சூட்டரின் திட்டம்.. ஆனால் மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்துவிட்டார் பல இடங்களில்.. ( அதை பின்னர் விரிவாக தருகிறேன்..)
இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த பின்னர், சிறிய கண்காணிப்பு ஒன்றே நடந்தது.. கொழும்பில் இருந்து கட்டுநாயக்க செல்லும் நெடுஞ்சாலையில் அதி வேகமாக சென்ற வாகனங்களை பாதுகாப்புத்துறை நோட்டமிட்டது.. அதில் சிக்கிய வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன.. அதில் சிக்கினார் அஸ்மான்..
பணத்துக்காக அல்லாமல் நண்பர்களின் நட்புக்காக இதுவரை 5 பேருக்கும் மேற்பட்டோரை போட்டுத்தள்ளியிருக்கும் துப்பாக்கிதாரி, சட்டத்தரணி போலவே ஆடையுடுத்தி இதற்கு முன்னர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து போயுள்ளார்.. அவருக்கு துப்பாக்கியை புத்தகத்தில் மறைத்து கொண்டுவந்த நீர்கொழும்பு போதைப்பொருள் வியாபாரி செவ்வந்தியும் ஒத்திகைகளை செய்துள்ளதாக தகவல்.. செவ்வந்தி தலைமறைவாகிய போதும் தேடப்படுகிறார்..
சட்டத்தரணிகள் பாவிக்கும் அடையாள அட்டை தயாரித்து, சட்டப்புத்தகத்தை வெட்டி அதனுள் துப்பாக்கியை வைக்கும்வரை எல்லாமே செவ்வந்தி அக்காவின் கைவேலைகள் தானாம்..
பிற்குறிப்பு - அவர் இஸ்லாமியர் பெயர் கொண்டிருந்தாலும் அதுவும் போலியானதா என்பது குறித்து ஆராயப்படுகிறது.ஏற்கனவே இவர் சமிந்து, பியுமங்க என்ற பெயர்களில் அடையாள அட்டைகளை வைத்திருந்த தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: சிவா ராமசாமி