உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகளால் விழிப்புணர்வு நடைபவனி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

 


 























 

 

 

 உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு  ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகளால் விழிப்புணர்வு நடைபவனி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த கொடிய தொழு நோயால் ஆரையம்பதி பிரதேசத்தில் ஏழு நபர்கள் பாதிக்கப்பட்டு இனம் காணப்பட்டதையடுத்து  இன் நடைபவனி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஆரையம்பதி சுகாதாரப் பிரிவு வைத்தியசாலையிலிருந்து பாரதி வீதி, மத்திய வீதி, கடற்கரை வீதி, செல்வாநகர், வீதி ஊடாக பிரதான வீதியை வந்தடைந்து மீண்டும் சுகாதார வைத்தியசாலைக்கு நடை பவனியாக சென்றடைந்தது.

தொழு நோயாளர்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நோயாளர்கள் என சமூகத்திலிருந்து இணங்காணப்பட்டு ஒதுக்குதல் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதை ஊக்குவிப்பதுமாக எனும் தொனிப்பொருளில் இப் பேரணி இடம் பெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியானது ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தேவசிங்கம் திலக்சன் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தின் வைத்தியர் திருமதி. தர்ஷினி காந்தரூபன், தொழுநோய் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர். லிபோஜிதா தொற்று நோயியல் வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் ஆரையம்பதி பிரதேச செயலாளர் தினேஷ் தட்ஷன கௌரி, பிரதேச சபை செயலாளர் சர்வேஸ்வரன், கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர். இதில் தாதியர் பயிற்சியின் பாடசாலை அதிபர், மற்றும் விரிவுரையாளர்கள் தாதிய பாடசாலையின் மாணவர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.