சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் தொழுநோய் பரவுதலை தடுக்கும் முகமாக மாபெரும் விழிப்புணர்வு பேரணி முன்னெடுப்பு-2025.02.25







































 

மட்டக்களப்பு  மாவட்டத்தில்
 தொழுநோய்  பரவுகின்ற வீதத்தை குறைக்கும் வகையில் சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இதனை கட்டுப்படுத்த தொடர்ச்சியான வேலை திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 இலங்கையிலே இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் வகிக்கின்ற காரணத்தினால் பொதுமக்களுக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை அலுவலகத்தினால்  தேசிய தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு தொழு நோயாளர்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, நோயாளர்கள் என சமூகத்திலிருந்து இணங்காணப்பட்டு ஒதுக்குதல் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதை ஊக்குவிப்பதுமாக எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு நகரில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி  இடம் பெற்றது

கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு பேரணியானது பதாகைகள் ஏந்தியவாறு நகரின் பிரதான வீதிகளுடாக மட்டக்களப்பு நகரை சென்று பின்பு  பிராந்தியசுகாதார சேவைகள் பணிமனை வந்தடைந்தது.
பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக பணிப்பாளர் வைத்தியர் R. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் N. தனஞ்செயன் வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதனைகள் தாதியர் பாடசாலை மாணவிகள்  மற்றும் விரிவுரையாளர்கள்  கலந்து  கொண்டனர்.