வரதன்
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சகல துறைகளிலும் இத்திட்டம் உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதை அடுத்து சுகாதார அமைச்சி னால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறன் உடையதாக முன்னெடுப்பதற்காக வேலை திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. R. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது
இதே வேளை புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல கல்வி வளையங்களில் கீழ் பணியாற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பொது சுகாதார ஊழியர்கள் வைத்தியர்கள் சமூகத்தில் களப்பணி ஆற்றும் அரச உத்தியோசர்களுக்கான செழிப்பான நாடு மகிழ்ச்சியான வாழ்க்கை எனும் கருத்திட்டத்தின் அமைவாக
இளம் பருவத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி மட்டக்களப்பின் தற்போதைய பாரிய மனநல சுகாதார சீர்கேடு நிலமைகளிருந்து மேலெழல், கல்வி, சுகாதார துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு இளம் பருவத்தினர் ஆசிரியர்கள் பெற்றோர்களின் மனநல சுகாதார மேம்பாடு - மேலதிக சிறப்பு பயிற்சி - வளவாளர்களை இணைப்பாளர்களை உருவாக்கல் 3 நாள் வழிவிட பயிற்சி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது
பிரதம அதிதியாக சிரேஷ்ட மனநல வைத்தியகலாநிதி இ கணேசன் கலந்து கொண்டு சிறப்பு வாழ்க்கை திறன்கள் பயிற்சிக்காக வளவாளராக கலந்து கொண்டனர் வளவாளர்களுக்கான Dr டான்.சௌந்தரராஜா கருத்துரைகளை இங்கு வழங்கி வைத்தார்