சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்த "Leader crystal Heroes-2025"

 

 


 

 













 வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு (1999-2024) நிறைவினை முன்னிட்டு (Silver parade) எனும் நாமத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி மிக விமர்சையாக  நடைபெற்றது.

 கழக தலைவர் எம்.றிஹாஸ் இஸ்மாயில் தலைமையில் கழக உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வாழைச்சேனை பொது மைதைனத்திலிருந்து ஆரம்பமாகி ஓட்டமாவடி சுற்றுவட்ட சந்தியினூடாக மீண்டும் வாழைச்சேனை பொது மைதானத்தை வந்தடைந்தது..

 அதனை தொடர்ந்து கழக அங்கத்தவர்களை 4 அணிகளாக வகைப்படுத்தி கிரிகெட், உதைப்பந்து, கரப்பந்து போட்டிகள் நாடாத்தப்பட்டு எதிர்வருகின்ற 26.02.2025 அன்று இறுதி நிகழ்வுகள் கௌரவிப்பு நிகழ்வுடன் நிறைவுபெற இருக்கின்றன.

கௌரவிப்பு நிகழ்வானது வாழைச்சேனை  பிரதேசத்தில் விளையாட்டில் பிரகாசித்த வீரர்கள் மற்றும் எமது கழகத்தின் சிரேஷ்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வாக இராப்போசனத்துடன் இடம்பெறவிருக்கின்றது.