வரதன்
கடந்த காலங்களைப் போல் அல்லாமல் தற்போது இன மத பேதமில்லாமல் சேவையாற்ற கூடிய ஒரு சந்தர்ப்பம் புதிய அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ளது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அஸ்வஸ்ம திட்டத்தில் அதிகம் உள்வாங்க வேண்டும் புதிய அரசாங்கம் கொண்டு வருகின்ற அனைத்து திட்டங்களும் வெற்றி பெற அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் S.M நலீம்
கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வஸ்ம கொடுப்பனவு திட்டத்தில் சில குறைபாடுகள் நிறைந்தே காணப்பட்டன சரியான தரவுகள் மூலம் பயனாளிகள் தெரிவு செய்யப்படாததால் அரச ஊழியர்கள் இன்றும் பொது மக்களினால் குறை கூறப்படுவது தவிர்க்கப்பட்டு எதிர்வரும் காலங்களில் இத்திட்டமானது ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வந்தால் மட்டுமே இது நிலைபெறான திட்டமாக அமையும்
இத்திட்டத்தின் ஊடாக கொண்டுவரப்படும் உற்பத்தி பொருட்கள் குரிய முறையான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் இத்துறை சார்ந்த நிபுணர்களின் அறிவுரையை பெற்று இதனை முன்னெடுக்க வேண்டும்
வடக்கு கிழக்கிலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இத்திட்டத்தில் அதிகம் உள்வாங்க வேண்டும் என்பதோடு கடந்த காலங்களைப் போல் அல்லாமல் தற்போது இன மத பேதமில்லாமல் சேவையாற்ற கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற அனைத்து வேலை திட்டங்களுக்கும் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்
அரசாங்கம் கொண்டு வருகின்ற அனைத்து திட்டங்களும் வெற்றி பெற வேண்டுமானால் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் இந்த நாடு அபிவிருத்தி அடையும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் நலீம் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்