அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எருவில் YUK  குழுமத்தினால் 200 மரக்கன்றுகளை ஆலயங்கள் பொது இடங்களில் நடப்பட்டது.

 

 


 அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எருவில் YUK  குழுமத்தினால் 200 மரக்கன்றுகளை நேற்று (23) மாலை 04.30 மணிக்கு கழகங்களின் தலைவர்களின் தலைமையில் ஆலயங்கள் பொது இடங்களில் நடப்பட்டது.

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சிதிட்டத்தின் ஒரு அங்கமான சூழலை சுத்தப்படுத்தலும், சூழலை பசுமையாக்கலும் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தும் நோக்கோடு பொது விளையாட்டு மைதானம், பொது இடங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் 200 மரக்கன்றுகளை நடும் நிகழ்வு எருவில் கிராமத்தில் உள்ள அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு எருவில் கண்ணகி அம்பாள் ஆலயம் மற்றும் எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் போன்ற இடங்களிலும் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ் மற்றும் கண்ணகி அம்பாள் ஆலய தலைவர் மா.சுந்தரலிங்கம் அம்பலத்தடி பிள்ளையார் ஆலய தலைவர் சா.பேரின்பநாயகம் கௌரி அம்பாள் ஆலய பொருளாளர் எஸ்.பரந்தாமன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.