இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பரிசு காத்திருக்கிறது .

 


கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பரிசு தொகை வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ரூ.10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை தற்பொழுது ரூ.12 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி குறித்த சந்தேகநபர் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி எண்கள் –

கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநர் – 071-8591727

கொழும்பு குற்றப்பிரிவு OIC – 071-8591735

தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.