13 வயதுக்கு உட்பட்ட RDC BADMINTON POOL -2025, தேர்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது











இலங்கை பூப்பந்தாட்ட பிராந்திய வளர்ச்சி குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட  சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற 13  வயதுக்கு   உட்பட்ட  பிராந்திய வளர்ச்சி குழு  RDC BADMINTON
POOL - 2025  தேர்வு நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்வு 2025 மார்ச் 29ஆம் தேதி (சனிக்கிழமை)மட்டக்களப்பு   வெபர் உட்புற விளையாட்டு அரங்கில், விளையாட்டு ஆர்வலர்களின் பெரும் ஆதரவில் வெற்றிகரமாக நடைபெற்றது. சிறுவர் பேட்மிண்டன் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, விளையாட்டு மேம்பாட்டில் முதன்மை வகித்தனர்.   இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள்  ,ஆதரவாளர்கள் அனைவருக்கும்  மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட  சங்கம் தமது நன்றியை தெரிவித்து கொண்டது
மேலும் எதிர் காலத்திலும்  நமது இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் எனவும் வேண்டிக்கொண்டனர்