மட்டக்களப்பில் இருந்து தொழில் முறை கிறிக்கட் வீரர்களை உருவாக்கும் முனைப்போடு கோட்டைமுனை விளையாட்டு கழகம் பல சேவைகளை செய்துவரும் நிலையில் அதன் அடுத்த கட்டமாக இந்த கிரிக்கெட் சுற்று போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
மிகவும் பரபரப்பான 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் Season இதோ ஆரம்பம்
கோட்டைமுனை விளையாட்டு கழகமானது மட்டக்களப்பு பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நடாத்தும் 𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥𝐬 𝐂𝐫𝐢𝐜𝐤𝐞𝐭 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞 – 𝐔-𝟏𝟓 𝐂𝐫𝐢𝐜𝐤𝐞𝐭 𝐓𝐨𝐮𝐫𝐧𝐚𝐦𝐞𝐧𝐭 ஆரம்பமாக இருக்கிறது.
போட்டிகள் எதிர்வரும் 17 மார்ச் 2025 - 13 மே 2025 வரை நடைபெற உள்ளது.
பங்கேற்கும் பாடசாலைகள்: மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்/R.K.M சிவானந்த வித்தியாலயம், புனித மிக்கேல் கல்லூரி, விபுலானந்தா கல்லூரி மட்டக்களப்பு, மட்/ஊரணி சரஸ்வதி வித்தியாலயம்
இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், மதிப்புமிக்க போட்டி அனுபவத்தைப் பெறவும் இந்த போட்டி ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
மேலதிக விபரங்களுக்கு https://koddaimunaisportsclub.com
மட்டக்களப்பு கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்களை ஆதரிப்போம்! போட்டி சிறப்பம்சங்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்!