படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (16) விசேட அறிக்கையொன்றை வழங்க உள்ளார்.
கடந்த வாரம், சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால், படலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கைகளை கையாள்வதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையினால் கொள்கை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர், படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான மேலதிக பணிகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.