இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வேட்பாளராக பிரபல மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்


...

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வேட்பாளராக பிரபல மகப்பேற்று பெண்நோயியல் நிபுணர், பேராசிரியர், வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்கள் இன்றைய தினம் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.

இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரதி உபவேந்தரும், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியரும், மட்டக்களப்பு றோட்டரிக் கழகத்தின் முன்னாள் தலைவரும், மட்டக்களப்பு நகர் றோட்டரிக் கழகத்தின் செயலாளரும், மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க உறுப்பினரும், புளியந்தீவு ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவரும், மட்டக்களப்பு பாடுமீன் விளையாட்டுக் கழகம், புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகம் ஆகியவற்றின் ஆலோசகரும், மட்டக்களப்பு கலாபம் கலை மன்றத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஆவார்.

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற மகப்பேற்று நிபுணர்களில் ஒருவராகத் திகழும் இவர் பல அமைப்புகளின் ஊடாக மாவட்ட ரீதியில் பல்வேறு மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வந்தவர்.

மத பேதமின்றி தான் வாழும் பிரதேசத்தின் அனைத்து மக்களையும் நோக்கும் ஒருவர்.

தற்போது தான் வாழும் பிரதேசத்தின் அரசியல் ரீதியான அபிவிருத்தி தொடர்பில் தன்னால் இயன்ற சேவையினை முன்னெடுப்பதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளராகக் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்றையதினம் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.