துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் இலங்கையில் முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட, யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் அல்ஃபிரட் துரையப்பாவின் பேத்தியான ரகுதாஸ் நீலாட்சி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வசித்தவர் என்றும் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா சென்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.
இந்த வீட்டில் இதற்கு முன்பு மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். அது 2024 பிப்ரவரியில் ஒரு முறையும், மார்ச் மாதம் இரண்டு முறையும் ஆகும். ஒவ்வொரு முறையும் சந்தேக நபர்கள் தொலைவில் இருந்து வீட்டை நோக்கி சுட்டுள்ளனர். எந்த சந்தர்ப்பத்திலும் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை.
வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரகுதாசன் நிலாட்சி உயிரிழந்தார் மற்றும் அதே வீட்டில் இருந்த 26 வயது இளைஞர் பலத்த காயத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காயங்கள் ஆபத்தானவை என்றாலும் உயிருக்கு ஆபத்தில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
வீட்டின் பாதுகாப்புக்காக இருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் ஒன்றையும் துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, நவீன ரக கேப் வண்டியில் நான்கு பேர் தப்பிச் சென்றமை சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்தனர்.
இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை, பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டமிட்ட கொலை என கருதி விசாரணை நடத்தி வருவதாகவும், கொலைக்கான காரணம் என்ன என்பதை சொல்ல இன்னும் கால அவகாசம் தேவை என்றும் போலீசார் தெரிவித்தனர்.