இலங்கை தேசிய சமாதான பேரவையினால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் தனியார் விடுதியில் விழிப்புணர்வு பயிற்சி செய்யலமர்வு 20.03.2025 நடைபெற்றது.
பிரதேசத்தில் ஏற்படுகின்ற சமய ரீதியான இன ரீதியான முரண்பாடுகளை களைந்து ஒரு நிலை பேறான சமாதானம் சுபீட்சம் நிறைந்த நாடாக சமூகங்களுக்கிடையே கொண்டு வருவது எனும் கருத்திட்டத்தின் கீழ் நடைபெற்றது
வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்கா திட்ட முகாமையாளர் தூ. நகுலேஸ்வரன் இதில் கைகோர்த்திருந்தார்
இலங்கை சமாதான பேரவையின் செயற்திட்ட முகாமையாளர்கள் என். விஜயகாந்தன், மதனி உவைஸ் தலைமையில் இச்செயலமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது
இதில் ஊடகவியலாளர்கள் சர்வ சமய அங்கத்தவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இப்ப பயிற்சி செயலமர்வின் வளவாளராக மட்டக்களப்பு, அம்பாறை, மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எம் ஐ எம். அசாத் இப்ப பயிற்சி செயலமர்வின் வளவாளராக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வணக்கம்