FREELANCER
கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இன்று காலை(2025.03.17) 2024 ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியது .
இந்த பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும். இவ்வாண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
சீரான காலநிலை நிலவுவதால் மாணவர்கள் முன் கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர்.
ஆலயங்களில் வழிபட்டு மாணவர்கள்
பெற்றோரிடம் ஆசீ ர்வாதங்களைப் பெற்று பரீட்சை நிலையங்களுக்கு சென்றனர் .