சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பெண்கள் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 114ஆவது மகளிர் தின விழா
(09) காலை அம்பாறை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
(09) காலை அம்பாறை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
பெண்களின் வலிமையைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின விழாவிற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான முத்து ரத்வத்த தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் இலங்கை நாட்டின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விசேட உரையையும் நிகழ்த்தினார். இங்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவின் அங்கத்தவர்கள் பெருமளவினர் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
பிரதியமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்புக் குழவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரியந்த மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவின் மாவட்ட மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அத்தோடு மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட பலரினதும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு, பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சமூக, அரசியல் செயற்பாட்டில் தலைமைதாங்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இங்கு வலியுறுத்திப் பேசினார்.