மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசாரப்பிரிவினால் படுவான் மண்ணில் முதல் தடவையாக முழுமதிக்கலைவிழா -2025


 
















மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசாரப்பிரிவினால் படுவான் மண்ணில் முதல் செயல்வாதமாக முழுமதிக்கலைவிழா மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கலாசாரஉத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன் தலைமை தாங்க பிரதம அதிதியாக பிரதேசசெயலாளர் சி.சுதாகர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக அண்ணாவிமார்களும் மத்தாள இசையோடு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு மங்கலவிளக்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் கிராமிய நடனம்,புத்தாக்க நடனம், கூத்திசை, மெல்லிசைப்பாடல்,இறைவனும் புலவனும் தென்மோடிக்கூத்து என்பன இடம்பெற்றன.