மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட கலாச்சார விழா நிகழ்வு - 2025






 






 























FREELANCER


 மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தினால் நேற்றைய தினம் 2025.03.15 ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் மாபெரும் கலாச்சார விழா முன்னெடுக்கப்பட்டது .

 ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயம் வரை தமிழ் கலாச்சார இன்னிய அணி இசையோடு ஊர்வலம் இடம் பெற்றது , ஊர்வலத்தில் அதிதிகளும் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் ,மாணவர்களும் , முன் பள்ளி ஆசிரியர்களும் , அழகியற்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள் .

ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டிற்கான பூஜைகள் நடைபெற்றதன் பின்னர்

நிகழ்வுகள் ஆரம்பமாகின .

கலாச்சார விழாவுக்கு ஆன்மீக அகதிகளாக கல்லடி உப்போடை இராம கிருஷ்ண மிஷன் உதவி பொது முகாமையாளர்
 ஸ்ரீமத் சுவாமி உமா தீக்ஷானந்தஜீ மகராஜ் , மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை சிரேஷ்ட விரிவுரையாளர் அருட் தந்தை A.A. நவரெட்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாகாணப்பணிப்பளார் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் திரு .S. நவநீதன் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக திருமதி C. விமலதர்சன் ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் (சங்கீதம் ) ஆகியோர் பங்கேற்றனர் 

வலயக் கல்வி அலுவலக கல்வி பணிப்பாளர் திருமதி சா . ரவிராஜா அவர்கள் தலைமையில் நிகழ்வுகள் யாவும் இடம் பெற்றன .

மாணவர்களின் குழுப்பாடல் , அழகியல் ஆசிரியர்களின் நெறிப்படுத்தலில் கொடுகொட்டி நடனம்

குடக்கூத்து

குரவையாடல்

உலக்கைநடனம்

கொற்றவையாடல் போன்ற நடனங்கள் அரங்கேற்றப்பட்டன .

பாடல் மற்றும் நடனங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு திதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன .

கலாச்சார விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என ஏராமானோர் கலந்து சிறப்பித்தனர் .




 
.