ஆரம்பமாகிறது சாரங்கபாணி சொல்லாடல் களம் 2025 - விவாதப் போட்டி (சவால் கிண்ணம்)



 
79 வருட வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராகக்
கடமையாற்றிய (1979 - 1988) முன்னாள் அதிபர் பெருமதிப்பிற்குரிய அமரர் ஐ. சாரங்கபாணி அவர்களின்
20ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமானது சாரங்கபாணி சொல்லாடல் களம் என்னும் பெயரினாலான விவாதப் போட்டியினை நடாத்த தீர்மானித்துள்ளது.

தெரிவு காண் போட்டிகள் மார்ச் மாதம் மாதம் 30 காலை 08 மணிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 31 ஆம் திகதி மாலை 04 மணிக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது

 
சாரங்கபாணி சொல்லாடல் களம் 2025 - விவாதப் போட்டியில்,
1. முதலாம் இடத்தைப் பெறும் அணியினருக்கு 20000.00 பணத்தொகையும் சாரங்கபாணி சொல்லாடல் களம்
ஞாபகார்த்த சவால் கிண்ணமும் முதலாம் இடத்திற ;கான வெற்றிக்கிண்ணமும்
2. இரண்டாம் இடத்தினைப் பெறும் அணியினருக்கு 15000.00 பணத்தொகையும் இரண்டாம் இடத்திற்கான
வெற்றிக்கிண்ணமும்
3. மூன்றாம் இடத்தினைப் பெறும் அணியினருக்கு 10000.00 பணத்தொகையும் மூன்றாம் இடத்திற்கான
வெற்றிக்கிண்ணமும்
4. போட்டியில் சிறந்த விவாதியாகத் தெரிவு செய்யப்படும் மாணவருக்கு சிறந்த விவாதி 2025 விருதும்
வழங்கிக் கௌரவிக்கப்படுவர்.


சாரங்கபாணி சொல்லாடல் களம் ஞாபகார்த்த சவால் கிண்ணம் :
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் சாரங்கபாணி சொல்லாடல் களம் விவாதப்
போட்டியானது 2025 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும். அதில்
வெற்றி பெற்று முதலாம் இடத்தினைப் பெறும் அணிக்கு அவ் ஞாபகார்த்த சவால் கிண்ணம் வழங்கப்படும்.
வெற்றி பெற்ற அப்பாடசாலை அடுத்த அடுத்த வருடங்களில் விவாதப் போட்டிக்கான விண்ணப்பங்கள்
கோரப்படும் போது அச் சாவால் கிண்ணத்தினை குறித்த வருடத்தில் நிருவாகத்தில் இருக்கும் பழைய
மாணவர் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு பாடசாலை தொடர்ச்சியாக 3 தடவை வெற்றி பெறும்
சந்தர்ப்பத்தில் ஞாபகார்த்த சவால் கிண்ணம் குறித்த அப்பாடசாலைக்கு உரித்தாகும்.