பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் பெருமானின் வருடாந்த பிரம்மோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் -2025



 சிவபூமியாகிய இலங்காபுரியிலே இயற்கை வளம் மிகுந்த எழில் கொஞ்சும் மட்டுமாநகரிலே வாழையூரின் தாழையூர்பதியுறை  எம்பெருமான் பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் பெருமானின் பிரம்மோற்சவப் பெருவிழாவானது 01.04.2025 செவ்வாய் கிழமை அன்று மாலை கிராம சாந்தி பூசை வழிபாடுகள் என்பன  இடம்பெற்று 02.04.2025 புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கொடியேற்றதுடன்(துவஜாரோகணத்துடன் )ஆரம்பமாகி  தொடர்ச்சியாக காலையும்,மாலையும் விசேட உற்சவங்களும் இடம்பெற்று 10.04.2025  வியாழக்கிழமை அன்று காலை தேர்திருவிழாவும்(இரதோற்சவம்) 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை தீர்த்தோற்சவம் இடம்பெற்று 

அன்று மாலை கொடியிறக்கமும்(துவஜாவரோகணம்) 12.04.2025 சனிக்கிழமை அன்று திருக்கல்யாணம் மற்றும் பூங்காவனத்திருவிழாவும் 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை வைரவர் பூசையும் இடம்பெற்று இவ்வருடத்துக்கான பிரம்மோற்சவப் பெருவிழாவானது இனிதே நிறைவுபெறவுள்ளது.

ஆகவே உலகவாழ் அனைத்து பக்த அடியவர்களும் எம்பெருமானின் பிரம்மோற்சவப் பெருவிழாவிற்கு ஆசாரசீலர்களாக  வருகை தந்து எம்பெருமானை தரிசித்து இறையருளைப் பெற்றேகுமாறு இறையன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.