மட்டக்களப்பு ஆரையம்பதி, "எள்ளுச்சேனை" ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மாசிமக அலங்காரத் திருவிழா - 2025





















மட்டக்களப்பு ஆரையம்பதியில் கோயில் கொண்டு விளங்கும் "எள்ளுச்சேனை" ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மாசிமக அலங்காரத் திருவிழா கடந்த 06.03.2025ம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 12.03.2025ம் திகதி நிறைவடையவுள்ளது.

இத் திருவிழாவின் 4ம் நாள் திருவிழாவானது ஆலயத்தின் "3ம் பாகை" மக்களினால் நிகழ்த்தப்பட்டது. இதன் போது "பட்டெடுக்கும் வைபவம்" ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.