மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களிடம் 250 வருடம் பழைமையான யப்பானிய ஓவியம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

 


 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களிடம் 250 வருடம் பழைமையான யப்பானிய ஓவியம் இன்று மட்டக்களப்பில் வைத்து டோக்கியோ பல்கலைக்கழக  பேராசிரியர் மிச்சிகோ ஸ்கிக் அவா அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள சமூக ஆய்வு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (17) இடம் பெற்றது.

அகில இலங்கை ரீதியில் கிழக்கு மாகாணத்தில்  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உளவளத்துனை அணுகுமுறை மற்றும் உளசமூக செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மற்றும் யப்பான் நாட்டு அனுகுமுறையையுடன் ஒப்பிட்டு ஆய்வு முறையை மேற்கொள்வதற்கு  டோக்கியோ பல்கலைக்கழக  பேராசிரியர் மிச்சிகோ ஸ்கிக் அவா அவர்கள் வருகைதந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

யப்பான் நாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட உளசமூக ஆய்வுகளையும்  இலங்கையில் காணப்படும் உளசமூக ஆய்வு முறைகளையும் ஆய்வு செய்து பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

இந் நிகழ்வில்  250 வருடம் பழைமை வாய்ந்த யப்பானிய புகழ்பெற்ற நாடக கலைஞரின் ஓவியமே இதன் போது நினைவுச்சின்னமாக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் உளவள துணை உத்தியோகத்தர்களுடன் பேராசிரியர் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன்  பாடசாலைகளில் உளவியலை மேம்படுத்துவதற்கு  தேவையான விடையங்கள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம் சமீன், உளவள துணை இணைப்பாளர் திருமதி சுபாநந்தினி உதயகாந்தன் உள்ளிட்ட மேலும் பல துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.