உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 17 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.