"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 2-8 வரை கொண்டாடப்படுகின்றது.
இதற்கமைய "தூய்மையான இலங்கை நிகழ்ச்சி திட்டத்தின் பெண்களின் பங்கு" எனும் தேசிய திட்டத்திற்கு அமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டட வளாகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன் அவர்களின் தலைமையில் இன்று(4.3.2025) சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது . இதில் மகளிர் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள், கிராம பொது மக்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.