சவூதி தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் 500 பேருக்கு காத்தான்குடியில் இப்தார் நிகழ்வு.


                                 

 




சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் அனுசரணையுடன்   ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இப்தார் நிகழ்வு காத்தான்குடி  மஸ்ஜிது ஸுன்னா பள்ளிவாயலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

 சவூதியரேபிய மன்னரான இருஹரம்களின் சேவகர்
ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஹபிழஹுமுல்லாஹ் அவர்களின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பில் உலகெங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்படி இப்தார் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

அந்த வகையில் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 5000 நோன்பாளிகளுக்கான இப்தார் - நோன்பு திறக்கும் ஏற்பாடுகளை இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.

காத்தான்குடி மஸ்ஜிதுஸ் ஸுன்னா பள்ளிவாயலில் இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வில் மஃஹதுஸ் ஸுன்னா அந் நபவிய்யா  அரபுக் கல்லூரியின் மாணவிகள்  ஆசிரியர்கள்,  முக்கிய உலமாக்களும் மற்றும் மஹல்லாவாசிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விசேஷ மார்க்க சொற்பொழிவுடன் ஆரம்பமான மேற்படி இப்தார் நிகழ்வில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 (ரீ.எல்.ஜவ்பர்கான்)