விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவின்
நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்
புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு
சென்றனர். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'போயிங்' நிறுவனத்தின், முதல்
விண்கலமான 'ஸ்டார்லைனர்' வாயிலாக இவர்கள் சென்றனர். அங்கு எட்டு நாட்கள்
ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர்.
இந்நிலையில்,
ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக
அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. போயிங் நிறுவனத்துக்காக
விருந்தாளியாக சென்ற அவர்கள், விண்வெளியில் சிக்கியதால் எப்போது பூமிக்கு
திரும்புவர் என்ற கேள்வி எழுந்தது. அவர்களுடைய உடல்நிலை தொடர்பான
கேள்விகளும் எழுந்தன. ஆனால், இருவரும், விண்வெளி மையத்தில்
தங்கியிருந்தபோது, தங்களுடைய பணிகளை மேற்கொண்டனர்.
https://www.maalaimalar.com/news/world/sunita-williams-returns-home-promise-made-promise-kept-says-white-house-765023?utm_source=izooto&utm_medium=on_site_interactions&utm_campaign=Exit_Intent_Recommendations
https://www.maalaimalar.com/news/world/sunita-williams-returns-home-promise-made-promise-kept-says-white-house-765023?utm_source=izooto&utm_medium=on_site_interactions&utm_campaign=Exit_Intent_Recommendations