புதிய சட்ட கட்டமைப்பின் ஊடாக பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குற்றவியல் சம்பவங்களை  முடிவுக்கு கொண்டு வரும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

வரலாற்றில் இனவாதம் மற்றும் தீவிரவாதத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையில் மீண்டும் இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

புதிய சட்ட கட்டமைப்பின் ஊடாக பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதக் குழுவின் பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் வரவு செலவுத் தலைப்பு மீதான விவாதத்தின் போது பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி அல்லது பாதுகாப்பின்மை பற்றிய சித்திரத்தை உருவாக்கவோ, பொது அமைதியின்மையை ஏற்படுத்தவோ அல்லது அரசாங்கத்தை வீழ்த்தவோ எதிர்க்கட்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.