மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் இரவு நேரத்தில் இடம் பெற்ற வாக்குவாதம் மோதலாக மாறி கத்திக்குத்தில் முடிந்தது , நபர் ஒருவர் மரணம்

 


மட்டக்களப்பு நகரை அண்டிய கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் இரவு நேரத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் இரு வியாபாரிகளுக்கு இடையில் திங்கட்கிழமை மாலை வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து ஆயித்தியமலையைச் சேர்ந்த குறித்த வியாபாரி உதவிக்கு தனது அண்ணனை அழைத்துள்ளார். குறித்த பகுதிக்கு அண்ணன் வருகை தந்ததையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக, சம்பவ இடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் ஆரம்பகட்ட தகவலாக உள்ளது.
இச்சம்பவத்தில் ஆயித்தியமலையை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை பேத்தாழை பகுதியில் திருமணம் செய்து கெண்டவருமான ஒரு பிள்ளையின் தந்தையான டிலோஜன் (வயது -33) என்பவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலில் 7 இடத்தில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி பாதியாக உடைந்த நிலையில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது