தனது செயலாளராகப் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அது
தொடர்பான காணொளியை பதிவேற்றுவதாக அச்சுறுத்திய சம்பவத்தில் பொது
பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்கவை சந்தேநபராக
பெயரிடவிருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு
அறியப்படுத்தியுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி பிரிவு இந்த அறிவிப்பை கொழும்பு – கோட்டை நீதவான் நிலுபுலீ லங்காபுரவிடம் முன்வைத்துள்ளது.
இதற்கமைய,
அடுத்த மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொது பயன்பாடுகள்
ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்கவிற்கு நீதிமன்றம் அறிவித்தல்
விடுத்துள்ளது