அரசின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன! ஐ.ம.சக்தியின் அமைப்பாளர் வினோகாந்த் சாடல்

 



அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் வாக்குறுதிகளாக இருக்கின்றன .  அவர்கள் வாய் மூலமான ஒரு அரசியலைத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்தார்.

திருக்கோவில் ஆலையடிவேம்பு காரைதீவு நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

இதுவரை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உறுப்பினர்கள் இல்லாத ஐக்கிய மக்கள் 
சக்தி நிச்சயமாக இம் முறை அதிகமான பிரதேச சபைகளுடைய அதிகாரங்களை கைப்பற்றும். அதில் எவ்வித மாற்றமுமில்லை. 
இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள்.
 
77 வருட சாபக்கேடு என்ற கோசத்தை முன்வைத்துதான் அவங்க அரசாங்கத்துக்கு வந்தாங்க. ஆனால் 77 வருடமாகவே இருந்த பொருட்களுடைய விலைகள் அவங்க வந்த பிறகு ரெண்டு மூணு மாதத்துக்குள்ளே கிட்டத்தட்ட இருந்த விலையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக உயர்வடைந்து விட்டது.

 எனவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி காணப்படுவதாலும்  இன்று மக்கள் மத்தியின் தலைவர் சஜித் பிரேமதாச  நம்பிக்கைக்குரிய ஒரு தலைவராக உருமாறி இருப்பதாலும் மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்ந்த வேட்பாளர்களுக்கு இம்முறை வாக்களித்து பிரதேச சபைகளுக்கு அனுப்புவார்கள் என்பதில் நாங்க அதிக நம்பிக்கை இருக்கிறோம்.
எனவே  ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிப்பதனால் சமகாலத்தில் காணப்படக்கூடிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உட்பட  நல்ல ஒரு சுபிட்சமான இலங்கை நாட்டை கட்டிஎழுப்பக்கூடிய நிலைப்பாடு எங்களுக்கு ஏற்படும்.
 எனவே அதற்கு  அனைவரும் ஒத்துழைக்கும் படி மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என்றார்.
 
 
 ( வி.ரி.சகாதேவராஜா)