ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் தண்ணீர் பிரச்சினையை நீக்கும் பொருட்டு நீர்தாங்கி வழங்கி வைப்பு .

   

 










ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவில் நீண்டகாலமாக நிலவி வந்த தண்ணீர் தட்டுப்பாட்டை அடுத்து தண்ணீரை சேகரித்து வைப்பதற்காக 5000 Litre தண்ணீர் தாங்கி ஒன்று திருமதி தனுஜா சிவரூபன் (Civil Engineer & JP (WI) அவர்களின் முழு முயற்சியால் Lions club of colombo , Waters Meet அவர்களின் அனுசரணையில் 12.03.2025 அன்று பாடசாலை வளாகத்தில் ஆரம்பப்பிரிவின் பிரதி அதிபர் திரு சுகுமார் அவர்களின் முன்னிலையில் பாடசாலையின் அதிபர் திரு. ராஜன் அவர்களிடம் District Governors Consultant s and Club Board of Director, Lion A.A.Chandrathasa MJF MAF அவர்களால் கையளிக்கப்பட்டது.

அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கான புத்தகப்பைகளும் இதன்போது வழங்கப்பட்டது. தங்குமிடம் தொடர்பாக இடர்பாடுகளை எதிர்நோக்கும் ஹைலன்ஸ் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்த 4 மாணர்வகளுக்கான உதவி தொகையும் , District Governors Consultants and Club Board of Director, Lion A.A.Chandrathasa MJF MAF , மற்றும் நோர்வேயை சேர்ந்த திரு. சிவரஞ்சன் ஆகிய இருவராலும் ஏற்கனவே இணைந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது .