ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, மதுவரித் திணைக்களம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்த ஆண்டின் வருமான இலக்குகளை அடைவது போன்ற விடயங்களை நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
வரி சேகரிப்பில் செயல்திறன் மற்றும் நியாய போக்கு என்பவற்றை உறுதி செய்வதற்காக மதுவரித் திணைக்களத்தின் செயல்பாடுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இணைப்பது குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மதுவரித் திணைக்களத்தின் செயற்திறனை மேம்படுத்துவதற்காக மனிதவள அபிவிருத்தித் திட்டம் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வழிகாட்டல் திட்டமொன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மதுவரி ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா உட்பட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.