இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எருவில் பிரதேச முன்னாள் உறுப்பினர் தேசிய மக்கள் கட்சியில் இணைந்து கொண்டார்.

 


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சிவப்பிரகாசம் காண்டீபன் தற்போது தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் வட்டாரக் கிளையின் தலைவராக செயற்பட்டு அக்கட்சியிலேயே கடந்த உள்ளூராட்சி மன்றத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உறுப்பினராக செயற்பட்டார்.

இந்தநிலையில் தற்போது தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி தேசிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.