வரதன்
அரசாங்கத்தின் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சின் ஒழுங்கமைப்பின் கீழ் அறிவு சார் குறைபாடு உடையோருக்கான சங்கத்தின் அனுசரணையில் இந்த இரண்டு நாள் பயிற்சி செயல் அமர்வு இன்று மட்டக்களப்பு YMCA கட்டடத்தில் ஆரம்பமானது
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை களில் மாணவர்களின் பரீட்சைகளின் போது முக்கியமான பாடங்களில் புள்ளி மட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் அப்பகுதியில் கல்வி கற்கும் ஆசிரியர் களுக்கான இந்த பயிற்சி செயல் அமர்வு முன்னெடுக்கப்பட்டது
அவர்களின் திறமைகளை இனம் கண்டு எதிர்காலத்தில் அவர்களுக்குரிய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த பயிற்சி செயல் அமர்வு நோக்கமாகும்
அறிவு சார் குறைபாடு உடையோருக்கான சங்கத்தின் தலைவர் நீகால் நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வளவாளர்களாக வைத்தியர் தனபால கலந்து கொண்டார்
சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள் நந்தினி விஜய ரத்னம் மாவட்டத்தின் ஆசிரியர்கள் வளையக்கல்வி அலுவலகங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் இவு நிகழ்வில் கலந்து கொண்டனர்