இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

 


இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 824 ஆக இருந்தது.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதால், கூடிய விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேசிய STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.