கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் யானைகளினால் நாசப்படுத்தி அழிக்கப்பட்ட இடங்களை பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் மற்றும் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கூட்டமாக ஊடுருவும் யானைகள் காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட பயன் தரும் மரங்கள் வீட்டுத்தோட்டங்கள், குடியிருப்புக்கள், வேலிகள் என்பவற்றை துவம்சம் செய்து வருகின்றது.
பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்தழிவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், நூற்றுக்கணக்கான காய்க்கும் தென்னை மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேசத்தில் யானை, மனித மோதலை கட்டுப்படுத்தி சொத்தழிவு, உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இதற்கான நிரந்தரத்தீர்வு பெறும் நோக்கில் இப்பிரதேசங்களுக்கு களவிஜயம் மேற்கொண்ட செயலாளர் நிலைமைகளை அவதானித்தார்.