சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக் கப்பட்டுவரும் கிளீனிங் ஸ்ரீலங்கா பணிகள் சம்பந்தமான கள ஆய்வு விஜயம்.


 


 




வரதன்

 

 

 

 

மாகாண ஆளுநரின் உத்தரவுக்க அமைய  மாகாண பாடசாலைகளில் முன்னெடுக் கப்பட்டு வரும் கிளீனிங் ஸ்ரீலங்கா பணிகள் சம்பந்தமான கள ஆய்வு விஜயம் தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகிறது


இதே வேலை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும்  இன்று  மட்டு கல்வி வளையத்திற்குட்பட்ட பெண்கள் பாடசாலை களில் மாணவர்களுக்கான முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் சம்பந்தமாகவும்

தின்மகழிவு முகாமைத்துவம்  மாணவர்களுக்கான சுத்தமான குடிநீர் மற்றும்  டெங்கு நோயிலிருந்து மாணவர்களை காப்பாற்றுவதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகள்  சுற்றுச்சூழல் என்பனவற்றை ஆராயும்  கள விஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது


மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின்  பணிப்பாளர் டாக்டர் ஆர் முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற  களஆய்வு விஜயத்தின் போது மட்டக்களப்பு வளைய கல்வி அலுவலகத்தின் முறைசாரா கல்வித் திட்ட பிரதி கல்வி பணிப்பாளர் எஸ் ஜெகநாதன் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக உயர் அதிகாரிகள் மட்டு கல்வி வளைய அலுவலக உயர் அதிகாரிகள் பாடசாலை சமூகத்தினர் இதில் கலந்துகொண்டனர்


இதன்போது  மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சுகாதார வசதிகள் சம்பந்தமாக இங்கு முதன்மையான கள ஆய்வு  பணிகள் சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டது