
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 2ம் திகதி தொடக்கம் 8 வரை தேசிய நிகழ்ச்சி திட்டமாக கொண்டாடப்படுகின்றது.
இதற்கமைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் (06.03.2025) டேபா மண்டபத்தில் நிகழ்வு 01 இடம்பெற்ற "வினைத்திறன் மிக்க தொழிற்படை ஒன்று கௌரவமான தொழில் ஒன்று "எனும் தொனிப் பொருளுக்கமைய தொழில் புரியும் இடத்தில் வன்முறையற்ற தொழில் திருப்தியை உறுதி செய்ய நிறுவன கட்டமைப்பினை உருவாக்கும் நோக்குடன் மனவெழுச்சி ஆற்றுகை நிகழ்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுககு இடம் பெற்றது
இந்நிகழ்வின் வளவாளர்களாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ப. ராஜ திலகன் அவர்களும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிந்து உஷா அவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு காலை 9 மணி தொடக்கம் மாலை 4.20 மணி வரை இடம்பெற்றது.