வீதியில் மக்களின் போக்குவரத்தினை சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்து பங்கிடவேண்டிய நிலைமை ஏற்படும் .

 


வீதியில் மக்களின் போக்குவரத்தினை சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக  பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்து பங்கிடவேண்டிய நிலைமை ஏற்படும்  என நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் கால்பந்து சின்னம் சுயேச்சைக் குழு  தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர்  தெரிவித்தார்.


அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச  சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் பகுதியில் உள்ள அவரது அலவலகத்தில்  நடாத்திய விசேட ட ஊடகவியலாளர் சந்திப்பில்   கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.